பாஜக மாவட்ட தலைவரை இந்து மக்கள் கட்சியினர் ஓட ஓட விரட்டி, சரமாரியாக தாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மங்களம் ரவி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 30) இரவு தாராபுரம் பகுதியில் மங்களம் ரவிக்கும், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் மங்களம் ரவியை கம்பி, கட்டைகளால் தாக்கினர்.
பதிலுக்கு மங்களம் ரவியும் மோதலில் ஈடுபட, அந்த இடமே களேபரமானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிரதமர் உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக அழைப்பு விடுக்கப்படாதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மே தினம்: உரிமைகளைப் பேசுகிற நாள்!
அஜித் பிறந்தநாளுக்கு லைகா கொடுத்த மாஸ் அப்டேட்!