அரசுப் பணியில் இருந்துகொண்டு நாம் தமிழர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாசில்தாராகவும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர் செல்வக்குமார். இவர் தற்போது நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வன் குமரன் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலாளராக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டங்களில் செல்வக்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கவனத்துக்கு சென்றது.
இதனையடுத்து செல்வக்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை பீச் டூ தாம்பரம்… நவம்பர் 17-ல் ரயில் சேவையில் மாற்றம்!
ரூ. 6,000 கோடிக்கு ரூ.60 கோடி கூட வரல: ஸ்டாலினை டேக் செய்து அண்ணாமலை பதிவு!