பாஜகவில் அடுத்தடுத்து மூன்று பேர் கைது!

Published On:

| By Kavi

எஸ்ஜி சூர்யாவை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக மாநில செயலாளரான எஸ்ஜி சூர்யா, ‘மதுரையில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அவதூறு பரப்புவதாக சு.வெங்கடேசன் தரப்பில் காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை முதலாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எஸ்ஜி சூர்யா கைதுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தசூழலில் மதுரையில் 3 பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிசி சட்டப்பிரிவு 341, 364, 307, 506(2), ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளர், மேலபனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (37), பாஜக 28ஆவது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவர், செல்லூரை சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் கோசாகுளத்தை சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடிதடி விவகாரம் தொடர்பாக இவர்களை கைது செய்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு இவர்கள் மூன்று பேரும் காவல் நிலையத்திலிருந்து போலீசார் அழைத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியா

சென்னையில் குளிர்ந்த வானிலை : 16 மாவட்டங்களில் மழை!

12 மணி நேரம்… ரஞ்சிதமே ஸ்டைலில் மாணவர்களுக்கு விஜய் முத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel