பாஜக: மூன்று மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை இன்று நியமனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் கடந்த 2021 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவில் பல மாற்றங்களை செய்துவரும் அண்ணாமலை இன்று மூன்று மாவட்டங்களுக்கு பாஜகவின் புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அவர் இன்று(ஜூலை 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சி. ஜெகதீசன், விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் தலைவராக சரவணதுரை என்ற சி.ராஜா மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக மங்களம் என்.ரவி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.எஸ்.நாகேந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே.சுரேஷ் குமார் , புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஆர்.செல்வம் அழகப்பன் ஆகிய பொறுப்பாளர்கள் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காய்கறி விலை உயர்வு: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
ரொமாண்டிக் படங்கள்… தற்கொலைக்கு சமம்: இயக்குநர் மிஷ்கின்