அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து இன்று (டிசம்பர் 2) கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் திமுக அரசுக்கு எதிராக மூன்று நாட்கள் போராட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
டிசம்பர் 9, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
“சொத்து வரி உயர்வு,மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம், டிசம்பர் 9 ஆம் தேதி பேரூராட்சிகளிலும், டிசம்பர் 13ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும், டிசம்பர் 14ஆம் தேதி ஒன்றியங்களிலும் நடைபெறும் என்று அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வாய்ப்பு : மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் ஆபாச வீடியோ: திருச்சி நபர் மீது சிபிஐ வழக்கு!