ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்!

அரசியல்

கலைஞர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன், திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ,திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகம் அருகே தொடங்கி, மெரீனாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அதன்படி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் புதிதாக நிறுவியுள்ள கலைஞர் உருவ சிலை அருகே காலை 8.30 மணிக்கு அமைதி பேரணி தொடங்கியது. அதில் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் என பங்கேற்றனர்.

அண்ணா சாலையில் தொடங்கிய இந்த அமைதி பேரணி, வாலாஜா சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக, மெரினா கடற்கரையில் இருக்க கூடிய கலைஞர் நினைவிடத்தில் வந்தடைந்தது.

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி!

அங்கு முதலில் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அதன்பின்னர் கட்டுமான பணிகள் நடைபெற்று வரக்கூடிய கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர் பாலு உள்ளிட்ட எம்பிக்களும், மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, துரை முருகன், பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட எம்பிக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *