தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஊடகத்தில் பார்த்தே தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது தவறானது என்று அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 மே 22ஆம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“தற்காப்புக்காகத்தான் போலீசார் சுட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சமூக விரோதிகள் ஊடுருவியதுதான் வன்முறை அதிகரித்ததற்கு காரணம்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது டிவியில் பார்த்துத்தான் அதைத் தெரிந்து கொண்டேன்” என்று அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.
ஒரு மாநில முதல்வர், குறிப்பாக காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் இதுபோன்ற தகவலைக் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னது தவறானது.
அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.
ஆகையால் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறானது என ஆணையம் கருதுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
ஜெ.வின் கால்களுக்கு என்னாச்சு? ஆறுமுகசாமி தெளிவுபடுத்திய உண்மை!
ஜெ.வுக்கு வெளிநாடு சிகிச்சை: தடையாக இருந்த சசிகலா, விஜயபாஸ்கர்