நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா

அரசியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று(ஏப்ரல் 19) காலை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது, அவர் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரிடம், சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக வி.சி.க செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த திருமா,” நாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. இத்தனை நாள் ஆகும் என்று வழக்குகளில் உறுதியாக சொல்ல முடியாது. ராமஜெயம் படுகொலையில், இத்தனை வருஷம் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். அல்லது விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல் இருக்கலாம். ஆனால், அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சனையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை.” என்று கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அவரை பார்த்து திமுக காரன் போல பேசுகிறீர்களே என்று கேள்வி கேட்டார். அதைக்கேட்டு கோபமடைந்த திருமாவளவன், “ இந்த மாதிரியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள். அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள்” என்று எச்சரித்தார்.

அத்துடன் இது கேள்வி கிடையாது; உண்மையை கொண்டு வந்து கேள்வியாக வையுங்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியலாளர்களுக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதையை கொடுக்கிற அளவுக்கு கேள்விகள் இருக்க வேண்டும்.

திமுக வை எதிர்த்து எங்களைப்போன்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. தலித் பிரச்சினைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். நாளை கூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது.. எல்லாமே அரசு செய்யுங்க.. என்னங்க ஆவேசம்? தி.மு.க காரனா நான்? இதெல்லாம் ரொம்ப அநாகரீகமான பேச்சு.

அதிகாரிகளிடம் பேசிட்டு இருக்கோம். போராட்டம் நடத்திட்டு இருக்கோம். விசாரணை நடந்துட்டு இருக்கு. புனலானய்வு போய்ட்டு இருக்கு. நான் ஆவேசமா பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா? கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?” என்று கூறினார் திருமாவளவன்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எடப்பாடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்: பாஜக கண்டனம்!

+1
0
+1
4
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *