தமிழ்நாட்டில் இருந்து தொடங்கிய புதிய முயற்சி: ஜே.பி.நட்டா பெருமிதம்

அரசியல்

இளைஞர் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டின் செயல்பாடுகளில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிக்கும் என்று ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

தமிழக பா.ஜ.க.வின் யுவா மோர்ச்சா பிரிவு சார்பில் முதன்முறையாக ’தேசிய இளைஞர் நாடாளுமன்றம்’ என்ற நிகழ்ச்சி சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “2014ஆம் ஆண்டுக்கு முன் நமது நாடு ஊழல் நிறைந்த நாடாக, பின்தங்கிய நாடாக இருந்தது. ஆனால் இன்று நம் நாடு ஒரு பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

பிரதமர் மோடியின் கீழ், உலகிற்கு வழிகாட்டும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது.

நமது தேசத்தின் இளைஞர்களை காணொலி காட்சி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இளைஞர் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டின் செயல்பாடுகளில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த மாபெரும் முயற்சி தமிழ்நாட்டில் இருந்து தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் மற்றும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsAUS : 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *