இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. Modi’s speech in Ayodhya
இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோரும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில்,
“ஜனவரி 22 சூரிய உதயம் அற்புதமான பிரகாசத்தை தந்துள்ளது. ஜனவரி 22 2024 என்பது காலண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய கால சக்கரத்தின் தோற்றம்.
எங்கள் ராமர் வந்துவிட்டார். பல வருட போராட்டம் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு, நம் ராமர் வந்திருக்கிறார். எங்கள் பால ராமர் இனி கொட்டகையில் வசிக்க மாட்டார்.
இந்த முக்கியமான நாளின் சாட்சியாக இருந்து நான் இங்கு வந்துள்ளேன். என் முழு உயிரும் அந்த திவ்ய உணர்வில் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எங்களது நீண்டகால கனவு நிறைவேறுவதையும், ராமருக்கு நிரந்தரமான மற்றும் கண்ணியமான தங்குமிடமும் நிறுவப்பட்டுள்ளது.
இது பல நூற்றாண்டுகளாக நினைவில் வைக்கப்படும் மற்றும் விவாதிக்கப்படும் ஒரு தருணமாக கருதுகிறது.
ராமர் கோவில் கட்டப்பட்டது மக்களுக்கு ஒரு புதிய ஆற்றலை நிரப்பியுள்ளது. இந்த நேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
“இத்தனை வருடங்களாக ராமர் கோயில் கட்டுவது தாமதம் ஆனதற்கு இன்று நான் ராமரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அந்த இடைவெளி இன்று நீங்கியிருக்கிறது. பகவான் ராமர் நம்மை மன்னிப்பார்.
ராமர் கோயிலுக்கான சட்டப் போராட்டம் பல தசாப்தங்களாக நீடித்தது. எனினும் உரிய நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘அரிமாபட்டி சக்திவேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கில் அம்பேத்கரும் பெரியாரும்
அயோத்தியில் நிறுவப்பட்ட பால ராமர் சிலை: சிறப்பம்சங்கள் என்ன?
Modi’s speech in Ayodhya