திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் சனாதானம் எதிர்ப்பு குறித்து பேச மாணவிகளுக்கு அழைப்பு விடுத்து சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் அதனை இன்று வாபஸ் பெற்றுள்ளார்.
செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது,
இந்தசூழலில் செப்டம்பர் 15-ஆம் தேதி திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் திமுக சார்பில் நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கத்தில் திருவாரூர் அரசு கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அனைத்து துறை தலைவர்களுக்கும் அக்கல்லூரி முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதுகுறித்து அடுத்த சர்ச்சை: சனாதன எதிர்ப்பு பற்றி பேச மாணவிகளுக்கு அழைப்பு என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
கல்லூரி முதல்வரின் செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, “திமுக அரசு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது இல்லையா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கல்லூரி முதல்வர் தனது சுற்றறிக்கையை இன்று வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
செல்வம்
தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு!
மழை குறுக்கீடு: பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி!