திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 2022,2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து 2023 ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022 ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதுகளை 9 பேருக்கு வழங்கினார். 2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமி-க்கும்,

2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாசா வல்லவனுக்கும் வழங்கப்பட்டது.
இதேபோன்று திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர்மு.மேத்தாவுக்கும், தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது திரு.எஸ்.வி. ராஜதுரைக்கும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா.மதிவாணனுக்கும் முதல்வர் வழங்கினார்.
விருதுபெற்ற அறிஞர் பெருமக்களுக்கு தங்கத்தினாலான விருதுடன், 5 லட்சம் காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், சேகர்பாபு, தா.மோ. அன்பரசன், சென்னை மேயர் பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலை.ரா
மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி
“இலவசம் கொடுத்து நிதிச்சுமையை கூட்டாதீர்கள்” – நிர்மலா சீதாராமன்