சிங்கப்பூரில் இந்தியாவின் முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 5) அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். புருனேவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று சிங்கப்பூர் சென்றார்.
இன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
இருதரப்பு உறவுகளின் விரிவான மற்றும் ஆழ்ந்த அளப்பரிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த உறவை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக வளரச் செய்ய இருவரும் முடிவு செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று, அழைப்பு விடுத்தனர்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கடல்சார் விழிப்புணர்வு, கல்வி, செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்ப களங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் கூட்டாண்மை ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி, “இந்தியாவின் முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
செமிகண்டக்டர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் வோங்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பெற்றோருடன் இணக்கம்…மனைவியுடன் நெருக்கம்… விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த பின்னணி!
விஜய் பட பெயரில் சனாதனம்?: ரவிக்குமாரின் பதிவுக்கு தமிழிசை பதில்!