மதிமுகவில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. இவர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
அதில், “மதிமுகவைத் தொடங்கியபோது, வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாகக் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.
கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, “பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷங்களைப் பொதுவெளியில் மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கூறியுள்ளார். மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக அவர் மீது நடவடிக்கை இல்லை ” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 3ஆம் தேதி பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாகத் துரைசாமி அறிவித்திருந்தார்.
தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகத் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.
பிரியா
திக் திக் நொடிகள்..குஜராத்தை தெறிக்கவிட்ட ஜடேஜா
சென்னை : ஏஒன் சைக்கிள் உரிமையாளர் வீட்டில் ரெய்டு!