அரியலூர் சிப்காட்… ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமா

Published On:

| By Minnambalam Login1

ஸ்டாலினின் ஆட்சியில்தான் அரியலூர் மாவட்டம் முழுமையாக கவனிப்புக்கு வந்திருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்வதற்காக இன்று அரியலூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். கள ஆய்வின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கலைஞரின் உருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையடுத்து பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ.ராசா அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திருமாவளவன் “நான் நன்றி சொல்வதற்காக உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த மண்ணிற்க்குரியவன், இந்த மாவட்டத்தைச் சார்ந்தவன் என்கிற முறையில்  மக்களின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவைத் தொடங்கிவைத்த போது, அரியலூர் மாவட்டத்திலும் அப்படி ஒரு தொழிற்பூங்கா வேண்டும் என்று அந்த மேடையிலேயே முதல்வரிடம் வேண்டுகோளை வைத்தேன்.

இன்றைக்கு ரூ.1000 கோடி மதிப்பில் டீன் ஷூஸ் குரூப் என்கிற காலணி தயாரிக்கும் தொழில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்த திட்டம் நேரடியாக 15,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் என்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாக இது இருந்தாலும் கூட ஒப்பீட்டளவில் தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களுள் அரியலூரும், பெரம்பலூரும் உள்ளன என்பதை முதல்வர் அறிவார்.

அரியலூரில் ஏராளமான சிமண்ட் தொழிற்சாலைகள் இருந்தாலும் கூட, இன்னும் கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறவில்லை. உங்கள் ஆட்சிக்கு பிறகுதான் இந்த மாவட்டம் முழுமையாக கவனிப்புக்கு வந்திருக்கிறது, பெரியளவிலே வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியிலும் இப்போது நீங்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள் என்பது பெருமை அளிக்கிறது” என்றார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

திமுக… அதிமுகவுக்கு மக்களை பற்றி கவலையில்லை : உயர் நீதிமன்றம் வேதனை!

மனநலம் பாதிச்சிருச்சு, படத்தை பார்த்து கத்திய ரசிகர்!- கங்குவா கதறல்கள்!

”இன்றே பேசுங்கள்” : ஜெயம் ரவி, ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share