ஆதவ் அர்ஜூனாவுடன் 35 நிமிட தனி சந்திப்பு : திருமா விளக்கம்!

Published On:

| By christopher

thirumavalavan praise aadhav arjuna

”தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்ததில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை” என திருமாவளன் தெரிவித்தார். thirumavalavan praise aadhav arjuna

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா.

அதனைத்தொடர்ந்து, விஜய் முன்னிலையில் நேற்று (ஜனவரி 31) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனி அறையில் சந்திப்பு!

அதனையடுத்து சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் திருமாவளவனை நேற்று இரவு சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அம்பேத்கர் மற்றும் பெரியார் இணைந்து இருக்கக்கூடிய சிலையை திருமாவுக்கு ஆதவ் பரிசு அளித்தார்.

தொடர்ந்து இருவரும் சுமார் 35 நிமிடங்கள் தனி அறையில் ஆலோசனை மேற்கொண்டனர்.

தந்தையிடம் வாழ்த்து பெற வந்தேன்! thirumavalavan praise aadhav arjuna

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “எங்கு கள அரசியலை கற்றுக் கொண்டேனோ அங்கேயே ஆசி பெற வந்திருக்கிறேன். பெரியார், அம்பேத்கரின் கொள்கை ரீதியான பயணத்தையும், கள அரசியலையும் எனது ஆசான் திருமாவளவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற வந்தேன்.

புதிய பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அது மக்களுக்கானதாக இருக்கும். கொள்கை ரீதியாக என்னுடைய பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.

எந்த காலத்திலும் அம்பேத்கர், பெரியார் கொள்கைப்படியான அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பதை திருமா என்னிடம் அறிவுறுத்தியுள்ளார். நிச்சயமாக என்னுடைய மூச்சு உள்ளவரை அதே கொள்கையில் பயணிப்பேன்” என ஆதவ் தெரிவித்தார்.

thirumavalavan praise aadhav arjuna

தவெகவில் ஏன் சேர்ந்தேன் என விளக்கினார்!

தொடர்ந்து பேட்டியளித்த திருமாவளவன், “தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற ஒரு பாரம்பரியம்தான் அரசியல் களத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழலும் கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை.

இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுள்ள இந்த சூழலில், உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய நாகரீக பாடமாக பார்க்கிறேன்.

களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன், அவதூறுகளை பரப்பி தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெக பேசுகிறது. இதனால் நான் மனப்பூர்வமாக அதில் இணைந்திருக்கிறேன் எனும் விளக்கத்தை ஆதவ் தந்தார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தவெக சார்பில் பெரியாரின் கொள்கைகளைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என ஆதவ் சொன்னார்.

இந்த சந்திப்பில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை” என்று திருமாவளன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share