விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது அவர்களது விருப்பம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக மகளிர் அணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு குறித்து இன்று (செப்டம்பர் 10) அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், “மக்கள் பிரச்னைக்காக சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளோடும் இணைவோம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மற்றக்கட்சியினரும் இணையலாம்.
மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையிலேயே மதுவிலக்கு இடம்பெற்றுள்ளது. அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “அதிமுகவை விசிக அழைப்பது அவர்கள் விருப்பம். பங்கேற்பதும், பங்கேற்காததும் அதிமுக விருப்பம்” என்று பதிலளித்தார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று (செப்டம்பர் 10) தொடங்கி வைத்து பார்வையிட்ட பின் அமைச்சர் உதயநிதி இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வானிலை அறிக்கை: இன்று எங்கெங்கு மழை பெய்யும்?
அரசியலில் நுழைந்து அமைச்சர் ஆகலாம்… ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா? – வினேசுக்கு மாமா கேள்வி!