பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருக்கும் நிலையில் அதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக -பாமக கூட்டணி உறுதியாகி இன்று (மார்ச் 19) ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணி ராமதாஸும் தைலாபுரத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “அது அவர்களின் விருப்பம். கருத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை. சாதிய மதவாத அரசியலில் பாஜகவினர் திளைத்து கிடக்கிறார்கள். ஓபிசி, எம்.பி.சி மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கிறேன். சொந்த மக்களுக்கு பாமக துரோகம் செய்திருக்கிறது.
அதிமுக பாமக பாஜக ஒரே கூட்டணியாக இருந்தன. அதிமுகவும், பாமகவும்தான் வாக்கு வங்கிகள் உடைய கட்சி. அவர்கள் சிதறிப்போனார்கள். இப்போது பாமக பாஜகவுடன் இணைந்திருக்கிறது. அது 0+1 என்று கணக்கில் வைத்தாலும், அதற்கு மதிப்பு ஒன்றுதான்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
மூழ்கும் கப்பலில் ஏறியிருக்கிறது பாமக, அதுவும் சேர்ந்து மூழ்கப்போகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
பயந்து போய் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்
பாஜக பாமக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி கிடையாது. அவர்களது நிலைப்பாடு மோசமானது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிதம்பரம், விழுப்புரம் வேட்பாளர்கள் : திருமாவளவன் அறிவிப்பு!
IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!