திமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடுகள் முடிவடையாத நிலையில், தான் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 27) உறுதி செய்துள்ளார்.
கூட்டணியில் எத்தனை இடங்களை விசிக கேட்டிருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக இன்னும் கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜக இன்னும் கூட்டணிக்கு ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எதிர்கட்சிகளே இல்லை அல்லது எதிர்கட்சி கூட்டணிகளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை உள்ளது.
திமுக கூட்டணியில் நாங்கள் 4 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். அதில் ஒரு பொதுத்தொகுதி மற்றும் மூன்றுதனித்தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். ஆனால் 8 முதல் 10 கட்சிகள் உள்ள கூட்டணியில் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். அதனால் சூழலுக்கு ஏற்றபடி முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.
அப்போது நீங்கள் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சிதம்பரம் எனது சொந்த தொகுதி. நான் அந்த தொகுதியில்தான் போட்டியிடுவேன். அதனால் அதில் ஒன்றும் கேள்விக்கோ குழப்பத்திற்கோ இடமில்லை” என்று திருமாவளவன் பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்.எல்.ஏ-கள்? – ட்விஸ்ட் வைத்த அதிமுக எம்.எல்.ஏ
இந்த இடங்களுக்கு ‘மழை நிச்சயம்’ வானிலை மையம் அறிவிப்பு!