நெல்லை இளம்பெண் படுகொலை: திருமாவளவன் கண்டனம்!

அரசியல்

நெல்லையில் இளம்பெண் படுகொலையை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர் நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை சந்தியா ஏற்க மறுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் விரக்தியடைந்த இராஜேஷ் கண்ணன் ஆத்திரப்பட்டு சந்தியாவை அவர் வேலை பார்த்து வந்த கடையில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இராஜேஷ் கண்ணன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட சந்தியா அவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அரசு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி ஆகியவற்றை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

தென் மாவட்டங்களில் தொடரும் சாதியப் படுகொலைகளையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும், மாணவர்களுக்கு இடையே ஏற்படும் சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அத்துடன், சாதிவெறி – மதவெறி தாக்குதல்களை தடுத்திடும் வகையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்கிற எமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

த்ரில் வெற்றியுடன் தங்கம் கைப்பற்றிய பாருல்: 10வது நாளிலும் ‘இந்தியா’ அசத்தல்!

பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு : ‘நியூஸ் க்ளிக்’ அலுவலகத்துக்கு சீல்!

+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *