பிரதமர் மோடி மே 30 ஆம் தேதி மாலை முதல் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சார காலம் முடிந்த நிலையில் தியானம் செய்து, அதை வெவ்வேறு கோணங்களில் வீடியோ எடுத்து வெளியிடுவதையும் பல கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு புகாராக அனுப்பின. ஆனால் தேர்தல் ஆணையம் வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியானம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில், “நரேந்திரா × நரேந்திரமோடி
அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! அவர் வெறுப்பை உமிழவில்லை! அதனால்- விவேகானந்தா ஆனார்.
இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு. அதனால்- ‘வெறுப்பானந்தாவாக’ வலம் வருகிறார்.
வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில் எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள் ஒருபோதும் எடுபடாது” என்று பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ஆபாச வீடியோக்கள்: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 6 நாள் போலீஸ் கஸ்டடி!
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?