திருமா பிறந்தநாள்.. ராகுல், ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Selvam

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 62-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

நமது நாட்டின் பன்மைத்துவ, கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்குமான நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்

சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட நெடுங்காலம் உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென விரும்புகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி. சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர்.

சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தமிழ்ச்சமூக மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின் அரசியல் பணியும், சமூகப்பணியும் மென்மேலும் தொடர்ந்திட என்னுடைய பேரன்பினைத் தெரிவிக்கின்றேன்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நன்றி இந்தியர்களே…! உற்சாக வரவேற்பால் வினேஷ் ஆனந்த கண்ணீர்

விமர்சனம்: டபுள் இஸ்மார்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel