நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று (மார்ச் 27) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார் திருமாவளவன்.
பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா, தேர்தல் நடத்தும் அதிகாரி அருணாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அதேபோல், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டி: சீமான் அறிவிப்பு!