விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 26) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விசிக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை திருமாவளவனை நேரில் சந்திக்க கட்சி நிர்வாகிகள் யாரும் சென்னை வர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், சென்னை – நெல்லை வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் என அடுத்தடுத்து தொடர் நிகழ்ச்சிகளில் திருமாவளவன் பங்கேற்றிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செல்வம்
பரவும் டெங்கு… 1000 இடங்களில் சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சு அறிவிப்பு!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவின் சதி: ஜான் பாண்டியன்
தலைவா…….
நன்றாக ஓய்வெடுங்கள்.