thirumagan efr dead

திருமகன் ஈவெரா மரணம்: தலைவர்கள் இரங்கல்!

அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று (ஜனவரி 34) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

இவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.ஜி.எச் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை இன்று (ஜனவரி 4) காலை மோசமடைந்த நிலையில், மதியம் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா 46 வயதில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவனை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா. திருமகன் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

திராவிடக் கழகத்தின் தலைவர் கி. வீரமணி

”தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அருமைத் தோழர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா. (வயது 46) மாரடைப்பால் ஈரோட்டில் மரணமடைந்தார் என்பதை அறிந்து பெரிதும் வேதனையும், துயரமும் அடைகிறோம்”

thirumagan efr dead

நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ வெ ரா திருமகன் சற்று நேரம் முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தாங்கமுடியாத துயரமும் வேதனையும் தருகிறது.

அவருடைய அகால மரணம் அவருடைய தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்பதை நான் அறிவேன்.
இது காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. திருமகனுக்கு கனத்த நெஞ்சுடன் என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்”.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

”ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளைப் பரப்பியவர். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்”.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

”தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியாரின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது”

பாமக நிறுவனர் ராமதாஸ்

”தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது.

திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளைப் பறித்து விட்டது”.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

”தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகேஎஸ் இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

”காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்துவாடும் ஈவிகேஎஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்”

மோனிஷா

அதென்ன ஓபிஎஸ் ஈபிஎஸ்?: நீதிபதிகள் கேள்வி!

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ உயிரிழப்பு: ஈவிகேஎஸ் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *