18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. அந்தவகையில் முதல்கட்டமாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், , மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சல் பிரதேசம், மேகலாயா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம் என 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இன்று காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த 102 தொகுதிகளில் பாஜக 40, காங்கிரஸ் 15, திமுக 24 அதிமுக 1, பகுஜன் சமாஜ் 3, சமாஜ்வாதி 2 மற்றவர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
21 மாநிலங்களில் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் – 35.7 %
அருணாச்சல் பிரதேசம் – 34.99 %
அசாம் – 45.12 %
சத்தீஸ்கர் – 42.57 %
ஜம்மு, காஷ்மீர் – 43.11 %
லட்சத்தீவுகள் -29.91 %
மத்திய பிரதேசம் -44.18%
மகாராஷ்டிரா – 32.36%
மணிப்பூர் – 45.68 %
மேகாலயா – 48.91%
மிசோரம் – 36.67%
நாகலாந்து – 38.83 %
புதுச்சேரி – 44.95%
ராஜஸ்தான் – 33.73%
சிக்கிம் -36.82%
தமிழ்நாடு – 39.43%
திரிபுரா – 53.04%
உத்தரபிரதேசம் – 36.96 %
உத்தரகாண்ட் – 37.33%
மேற்குவங்கம் – 50.96%
பிகார் – 32.41%
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த… ‘கேப்டன் அமெரிக்கா’ ஆக்ஷன் இயக்குநர்!
ரஷ்யா டூ சென்னை… ஆரவாரம் செய்த ரசிகர்கள்: வாக்களித்தார் விஜய்