”ஒண்ணுமே கிடைக்கலைனு 2 செல்போனை எடுத்துட்டுப் போறாங்க” -விஜயபாஸ்கர்

அரசியல்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர்13 )அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களிலும்,

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்பி வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர்: ”என் அப்பார்ட்மெண்டில் 3 அறைகள், 1 ஹால், 2500 சதுர அடி. எங்களது வீட்டில் 12 மணி நேரம் சோதனை செய்துள்ளனர்.

anti corruption vijayabaskar velumani house raid

திமுக அரசு ஒரு தனிநபர் மீது கொண்ட காட்டம் காரணமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இந்த சோதனை நடைபெற்றது என்று கருதுகிறேன்.

ஏற்கனவே நான் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை எதிர்கொண்டேன். அதை தொடர்ந்து இப்போது இரண்டாவது முறையாக சந்தித்தேன்.

நான் செய்தியாளர்களை சந்திக்க வரும்போது எனது வீட்டில் இருந்து 120 ஆவணங்கள் கிடைத்தாக தொலைக்காட்சியில் சொன்னார்கள்.

ஆனால் எனக்கு கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தில் எனது இரண்டு கைப்பேசிகளை தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

என் மகள் கூட லஞ்ச ஒழிப்பு துறையினர் அடுத்து எப்போது வருவார்கள் என்று கேட்டார்.

எனது மீது பதிந்த வழக்குப்படி, ஒரு அரசு மருத்துவ கல்லூரிக்கு என்ன விதிமுறைகளை பின்பற்றி உள்ளோமோ, அதே விதிமுறையை பின்பற்றிதான் ஒப்புதல் அளித்தோம்.

தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுக்கு கல்லூரி தொடங்க எந்த ஆட்சேபம் இல்லை என்று மட்டுமே தெரிவித்தோம். இதுபோன்று தற்போது திமுக அரசும் செயல்பட்டு வருகிறது.

அப்படி பார்த்தால் எங்கள் மீது 11 மருத்துவ கல்லூரி பெற்று கொடுத்ததற்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% பெற்று கொடுத்ததற்கு வழக்கு போட வேண்டும்.

அப்படி போட்டாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். திமுக அரசு செய்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்” என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே, குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.

தற்போது 2வது முறையாக மருத்துவக்கல்லூரி அனுமதி தொடர்பான விஷயத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அரசு நிகழ்ச்சியிலேயே மின் தடை! கோபத்தோடு கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *