நாமக்கல் – ராமநாதபுரம் கூட்டணி கட்சிகளுக்கு!

அரசியல்

திமுக கூட்டணியில் உள்ள  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளான மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் இறுதிகட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக இன்று (பிப்ரவரி 24) மேற்கொண்டது.

தொகுதி பங்கீடு முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும்,  கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Image

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ள நிலையில்,

Image

நாமக்கல் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும், வேட்பாளர் குறித்து செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியாவில் 6G சேவை : களமிறங்கும் நோக்கியா!

Video : பாஜகவில் இணைந்த விஜயதரணி : காங்கிரஸ் ரியாக்சன்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *