விஜய் தற்போது அரசியலுக்கு வந்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுடன் அரசியல் களத்தில் அதிரடியாக நுழைந்துள்ளார் விஜய். அவரது வருகைக்கு அரசியல் கட்சிகள், திரையுலகம், விளையாட்டு துறை என பல்வேறு தரப்பிலும் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயண ராவ் நேற்று (நவம்பர் 6) சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “வரட்டும், கமல்ஹாசன் போன்று விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும். அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது.
அவருக்கு அரசியல் ஆசை உள்ளது. அதனால் வந்துள்ளார். வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எனினும், விஜய் தற்போது அரசியலுக்கு வந்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை. அவரால் சாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம்” என்று சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”நாட்டிற்கான எனது போராட்டம் தொடரும்” : கமலா ஹாரிஸ் சபதம்!
பிக் பாஸ் சீசன் 8 : டார்கெட் செய்யப்படும் வைல்டு கார்ட் ஹவுஸ்மேட்ஸ்!