நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா தவிர ம.பி,. சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்றில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இன்று (டிசம்பர் 4) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத் தொடரை ஒட்டி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி.
அப்போது அவர், “எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய இந்த கூட்டத் தொடர், ஒரு பொன்னான வாய்ப்பு. நேற்றைய முடிவுகளின் மூலம் அவர்களின் ஒன்பது ஆண்டுகால எதிர்மறைப் பிரச்சாரத்துக்கு பலன் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகளின் மூலம் எதிர்க்கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
நல்லாட்சி நடந்துகொண்டிருக்கும்போது மக்கள் நலனில் பக்தி இருக்கும் போது ஆட்சிக்கு எதிரான மனநிலை என்ற வார்த்தையே தேவையற்றதாகி விடுகிறது. நீங்கள் அதை ஆட்சிக்கு ஆதரவான நிலை, நல்லாட்சி, வெளிப்படையான ஆட்சி, மக்கள் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தும ஆட்சி என்ற வார்த்தைகளில் அழைக்கலாம்” என்று கூறினார் பிரதமர் மோடி.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட உக்ரைன் முன்னாள் அதிபர்!
தண்ணீரில் தரையிறங்க முடியாது: தற்காலிகமாய் மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!