chance to admk - bjp reunion

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவின் சதி: ஜான் பாண்டியன்

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்காக கூட்டணியை உடைக்கின்ற செயலில் திமுக ஈடுபட்டிருக்கும் என்று ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுகவும் பாஜகவும் இணைவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்த பேட்டியில்,

“அண்ணாமலை தான் கூறிய கருத்துகளை எல்லாம் தன்னுடைய சொந்த கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இதனை பாஜவின் கருத்துகளாக எடுத்துக் கொள்ள கூடாது என்று பலமுறை அறிவித்துள்ளார்.

அப்படி இருக்கும் போது இந்த இருவரையும் உடைக்கின்ற செயலை திமுக செய்திருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கின்றது.

பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டால் அமோக வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக திமுக செய்த சதியாக இருக்குமோ என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவா பாஜகவா என்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டி மாவட்டச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களை வரவழைத்து விவாதம் நடத்தி கூடிய விரைவில் முடிவெடுப்போம்.

எடப்பாடி பழனிசாமி யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்று தெளிவாக சொல்லியுள்ளார்.

இதனை வைத்து பார்க்கும் போது, யாரை பற்றியும் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னாலே ஏதோ எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கருதலாம். எனவே மீண்டும் அதிமுக பாஜக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அப்படி சேராத பட்சத்தில் எங்கள் முடிவுகளை நாங்கள் அறிவிப்போம்.

அதிமுகவா பாஜகவா என்று மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தும் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க உள்ளேன்.

அவரை சந்தித்து விவாதம் நடத்தி உங்களுடன் இருப்பதா அல்லது பாஜகவுடன் இணைவதா என்று முடிவெடுக்க உள்ளோம் என்ற தகவலை சொல்ல உள்ளோம்.

கூட்டணி முறிவு குறித்த காரணத்தையும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி

அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

கர்நாடகா பந்த்: தமிழகத்தில் இருந்து பெங்களூருவிற்கு பேருந்துகள் இயக்கப்படுமா?

அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் நடந்த தரமான சம்பவங்கள்: டைம் டு டைம் ரிப்போர்ட்!

+1
0
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0