தேனி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் முதல்வர் திறந்த வைத்த ஆறு மாதத்திலேயே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. theni government law college cracked who is responsibility
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் வீரபாண்டி அருகில் தப்புக்குண்டு பகுதியில் அரசு சட்டக்கல்லூரி புதியதாக கட்டப்பட்டது.
இதைக் கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடைபெற்ற ஆறுமாதத்திலேயே தற்போது அக்கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதால் ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேட்ச் ஒர்க் செய்து மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த சட்டக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் நம்மிடம்,
“அதிமுக ஆட்சியில் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது இந்த தப்புக்குண்டு சட்டக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 14 ஏக்கர் பரப்பில் ரூ.81 கோடி செலவில் சட்டக் கல்லூரி கட்டுமானம் 2020 ஜூன் 3 ஆம் தேதி பூமி பூஜையோடு துவங்கப்பட்டது.
அதன் பின் இந்தக் கல்லூரியை திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி திறந்து வைத்தார்.
திறந்த ஆறு மாதத்துக்குள் விரிசல் விழுந்து அது பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டு சில இடங்களில் பூச்சுக் கலவைகள் அப்படியே பெயர்ந்து விழுந்து வருகின்றன” என்கிறார்கள்.
முன்னாள் எஸ்எஃப்ஐ மாவட்டச் செயலாளரும் தற்போதைய DYFI தேனி வட்டச் செயலாளருமான நாகராஜ் இது தொடர்பாக மின்னம்பலத்திடம் பேசினார்.
“முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தப்புக்குண்டு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சட்டக் கல்லூரி கட்டப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளரான அரசு ஒப்பந்ததாரர்தான் கல்லூரியைக் கட்டினார்.
ஆட்சி மாறியதும் கடந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆறு மாதத்தில் விரிசல்கள் விழுந்தன.
அப்போதே நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். இந்த கல்லூரியின் கட்டுமானம் குறித்து பொறியாளர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம்.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது மெல்லிய விரிசல்கள் தான், கலவையால் பூசினால் சரியாகிவிடும் என்றனர்.
தற்போது மீண்டும் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது, சீலிங்கில் பூசப்பட்ட பூச்சு கீழே விழுந்துள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் பயிலும் மாணவர்களுக்கே இந்த கதியா? theni government law college cracked who is responsibility
மாவட்ட நிர்வாகம் இனியும் மூடி மறைக்காமல் சரியான முறையில் ஆய்வு செய்து அரசு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்” என்றார் நாகராஜ்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாற்றுத்திறனாளிகளிடம் வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு
ED அலுவலகத்தில் இரண்டாவது நாளாக முத்தையா ஆஜர்!