பிரதமரின் கையை பிடிக்க வந்த பெண்ணை தடுக்க சென்ற பாதுகாவலரை பிரதமர் மோடி முறைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு இன்று (மே 7) நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு தனது வாக்கினை செலுத்தினார் பிரதமர் மோடி.
முன்னதாக வாக்குச்சாவடிக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு, பிரதமர் நடந்தே வாக்குச்சாவடிக்கு சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமருடன் உடனிருந்தார்.
பிரதமரை காண சாலையின் இரண்டு புறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படம், பாஜகவின் சின்னமான தாமரை படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அந்த பதாகைகளில் சிலருக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்தார். தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை காட்டி, வாக்களித்தார். பின்பு வெளியே வந்து பொதுமக்களை நோக்கி கையசைத்தார்.
PM Narendra Modi and HM Amit Shah going to cast their votes in #Ahmedabad for Lok Sabha 2024 election #LokSabhaElection2024 #LokSabhaElections2024 #Gujarat pic.twitter.com/f4hEfVUXbd
— GujaratHeadline News (@GujaratHeadline) May 7, 2024
அப்போது சாலையில் நின்றிருந்த பெண்களின் அருகே சென்றவருக்கு பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
அதில் ஒரு பெண் மோடியின் கையினை பிடிக்க வர, அதனை மோடியின் பாதுகாவலர் ஒருவர் தடுக்க முயற்சி செய்தார். ஆனால், அவரை பிரதமர் மோடி முறைத்ததும் அவர் அமைதி காத்தார்.
இதையடுத்து தனது குறைகளை சொன்ன அந்த பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்த மோடி அங்கிருந்து புறப்பட்டார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“திமுக ஆட்சி இதற்குதான் சாட்சி” : குற்றச்சாட்டுகளை அடுக்கிய டிடிவி தினகரன்
சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா… விசாரணைக்கு உத்தரவு!