”The warriors are back” - Mahua Moitra tweet viral

”திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – வைரலாகும் பெண் எம்.பி.க்கள் புகைப்படம்!

அரசியல் இந்தியா டிரெண்டிங்

“மக்களவையில் மீண்டும் வீராங்கனைகள் குழு” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா  முதலில் பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப்பு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சமூக வலைதளத்தில் நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

”The warriors are back” - Mahua Moitra tweet viral

”The warriors are back” - Mahua Moitra tweet viral

அதில், கடந்த 2019ஆம் ஆண்டு எம்.பி.க்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோரின் புகைப்படத்தையும், தற்போதைய மக்களவையில் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய புகைப்படத்தையும் “The Warriors are back! 2024 vs 2019 ”  எனப் பகிர்ந்திருந்தார்.

இதில், தற்போதைய புகைப்படத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கூடுதலாக இடம்பெற்றுள்ளார். இந்த புகைப்பட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல், இதே புகைப்படத்தை தனது எக்ஸ்வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, “We are back. Ready for battle” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”The warriors are back” - Mahua Moitra tweet viral

திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் “Women Power” என குறிப்பிட்டும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி “The warriors are back! 2024 vs 2019” எனக் குறிப்பிட்டும் அதே புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

”The warriors are back” - Mahua Moitra tweet viral

 

தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி, கரூர் தொகுதியில் இருந்து ஜோதிமணி, மத்திய சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன், மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து மஹுவா மொய்த்ரா ஆகியோர் எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

”The warriors are back” - Mahua Moitra tweet viral

மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் இருந்து சுப்ரியா சுலே, உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து டிம்பிள் யாதவ் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அன்று ”தமிழ் வாழ்க” மக்களவையில் முழங்கிய திமுக எம்.பி.க்கள் : இன்று என்ன நடக்கும்?

சிக்ஸ் மழை… டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *