ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய அறிக்கையில் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, ’SEBI தலைவர் புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள மோசடியான அதானி நிறுவனங்களில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது.
மேலும் அதன் காரணமாக தான் அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க செபி தயக்கம் காட்டுவதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் தங்களது மறுப்பை இன்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி செபியின் நேர்மையையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சிறு சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பத்திரக் கட்டுப்பாட்டாளரான செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தமான கேள்விகளைக் எழுப்பி வருகின்றனர்.
– செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
– முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், யார் பொறுப்புக் கூறுவார்கள் – பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது கௌதம் அதானியா?
– புதிய மற்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் ஒருமுறை தானாக முன்வந்து விசாரிக்குமா? என கேள்வி எழுப்புகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அதன் மூலம் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என்று ராகுல் விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”வங்கதேசத்தில் ஆட்சிக் கலைப்புக்கு காரணம் அமெரிக்காவின் சதி” : ஷேக் ஷசீனா குற்றச்சாட்டு!
IPL 2025: மெகா ஏலத்தில் ரிடென்ஷன் குறித்து வெளியான முக்கிய தகவல்!
இதே போல தேசியப் பங்குச் சந்தை ஊழலில் சித்ரா ராமகிருஷ்ணா மாட்டினாரே, அது என்னாச்சு?