ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. the tensions escalated ntk
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (பிப்ரவரி 3) நிறைவடைய உள்ள நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆலயத்தின் வெளியே நின்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். the tensions escalated ntk

அந்த பகுதியில் ஈரோட்டுக்கு பெரியார் செய்த நற்பணிகள் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த துண்டில், ஒருபுறம் சீமான் படமும் மற்றொரு புறம் காவி உடையணிந்த சீமான் படமும் இடம்பெற்றிருந்தது.
இதனை கண்டித்து பெரியாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு நகர காவல் நிலையத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி உள்ளிட்ட 50 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. the tensions escalated ntk