புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலங்கானாவில் தேசிய கொடி ஏற்றிய நிகழ்வை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தெலங்கானா அரசு குடியரசு தின விழாவை புதிதாக புறக்கணித்தால் பரவாயில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை புறக்கணிப்பது அவர்களுக்கு வழக்கமாகி விட்டது. எனக்கு இது புதுமையாக தெரியவில்லை.” என்றார்.

தெலங்கானாவில் கொடியேற்றி விட்டு புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் காலை 9.30 மணியளவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தேசிய கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் 1 மணி நேரம் தாமதமாக வந்து 10.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றினார்.
ஆளுநர் வருகைக்காக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கத் தாமதம் ஆனதால் குடியரசு தின விழாவிற்கு தாமதாக வந்ததாக தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று காலை 7 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலரஞ்சலி செலுத்தி விட்டு,
காலை 7.15 மணிக்கு தெலங்கானா ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி விட்டு சரியாக காலை 8 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டேன்.
புதுச்சேரி வான் எல்லையை அடைந்த நேரம் காலை 9 மணி. அந்த நேரத்தில் புதுச்சேரியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் புதுச்சேரி ஏர் டிராபிக் கண்ட்ரோலரின் அனுமதிக்காக காத்திருந்தோம்.
அப்போது அவர் மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் விமானம் தரை இறங்க முடியாது, வேண்டுமென்றால் சென்னையில் விமானம் தரையிறங்கி சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு வந்து சேரலாம் என்று தெரிவித்தார்.

குடியரசு தின நிகழ்ச்சியை மனதில் வைத்து வானிலை சரியாகும் வரை புதுச்சேரி வான்வெளியில் சுற்றி வானிலை சற்று சரியானதும் ஏர் டிராபிக் கண்ட்ரோலரின் அனுமதி அளித்த பிறகு சரியாக 09.45 மணிக்குத்தான் புதுச்சேரி விமான நிலையத்தில் தரை இறங்க முடிந்தது.
இதற்கான காரணம் என் கையில் இல்லை மோசமான வானிலையே காரணம்.
புதுச்சேரி மக்களின் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து தெலங்கானாவில் குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சரியான நேரத்தில் தான் கிளம்பினோம்.
மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்திற்கு புதுச்சேரிக்கு வந்து சேர முடியவில்லை.
இதை புரியாமல் விமர்சிப்பவர்களுக்கு இதுதான் சிறந்த பதிலாக இருக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கவனம்… நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!
நவீன டாங்கிகள்: ஜெர்மனி, அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா