தமிழரசிக்கு வந்த எதிர்ப்பு தப்பித்த கயல்விழி

அரசியல்

தமிழக உளவுத்துறை கடந்த ஐந்து தினங்களாக மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா, மானாமதுரை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி தொடர்பான தகவல்களை தோண்டித் துருவி எடுத்து முதல்வருக்கு அனுப்பினர்.

இவர்களுக்கு ஏதாவது தொகுதியிலோ மற்ற பகுதிகளிலோ வழக்குகள் உள்ளதா அமைச்சர்களாக்கினால் ஏதாவது பிரச்சனையாகுமா என்ற விவரங்களை அனுப்பினர்.

இதனால் ராஜாவும், தமிழரசியும் அமைச்சராவது உறுதியானது. கடைசி நேரத்தில் ராஜா மட்டும் அமைச்சராவதும் தமிழரசி விடுபட்டதும் ஏன் என்ற கேள்வி அமைச்சர்களிடம் எழுந்து வருகிறது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜை மாற்றினால் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்தவரை மாற்றி விட்டார்கள் என்ற சர்ச்சை வரும்.

அதோடு தமிழரசிக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்று அமைச்சர்கள் மூர்த்தியும் பெரியகருப்பனும் லாபி செய்தனர் என்றும் தமிழரசி அமைச்சர் ஆகாததற்கு காரணம் சொல்கிறார்கள்.

வேந்தன்

யார் யாருக்கு எந்தத் துறை?

கர்நாடக தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *