குடியரசுத் தலைவரான பிறகு முதன் முறையாக சென்னை வந்துள்ள திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 5) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூர் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்தார்.
அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு வந்தடைந்தார்.
அங்கு, ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடி மக்கள் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மைசூர் விமானப்படை தளத்துக்கு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
குடியரசு தலைவரான பிறகு முதன் முறையாக சென்னை வந்த திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றனர்.
நாளை சென்னை பல்கலைக் கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பிரியா
சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?: சமந்தா விளக்கம்!
சென்னை எக்ஸ்பிரஸ் முதல் ஜவான் வரை : ஷாருக்கானின் லுங்கி டான்ஸ்!