சென்னை மேற்கு மாவட்டத்தின் பாஜக ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முதலில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன், பாஜக அறிவுசார் பிரிவு மாநில முன்னாள் செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தனர்.
இந்தச்சூழலில் சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் ஒரத்தி.அன்பரசு தலைமையில் 10 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2 மாவட்டத் துணை தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சி.டி.நிர்மல் குமார் வழியில் அவருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவிலிருந்து விலகிய 13 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.
பாஜக – அதிமுக கூட்டணி நடந்து வரும் நிலையில், பாஜகவிலிருந்து அதிமுகவுக்குச் செல்வது கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 2024 தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரியா
ஆசிரியர் டூ முதல்வர்: யார் இந்த மாணிக் சாஹா?
ஜெயலலிதா மாதிரியான தலைவரா?: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!