புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், 25 க்கும் மேற்ப்பட்ட கட்சிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், அமைச்சரவை செயலர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும். சிறப்பு வாய்ந்த கட்டிடத்தின் சிறு காட்சியை இந்த வீடியோ வழங்குகிறது.
முக்கிய வேண்டுகோளை உங்களிடம் நான் வைக்கிறேன். இந்த வீடியோ உடன் உங்கள் கருத்துகளை குரலாக சேர்த்து அதனை சமூக வலைதளங்களில் பகிருங்கள். அவற்றில் சிலவற்றை நான் எனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வேன். அவ்வாறு நீங்கள் பகிரும்போது #MyParliamentMyPride என்ற ஹேஷ்டாக்கை இணைக்க மறக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்