நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்!

அரசியல்

சோனியா காந்தி, ராகுலுக்கு சொந்தமான டெல்லி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை :

1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் ஒரு கால கட்டத்திற்கு பிறகு காங்கிரசின் குரலாக ஒலித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் அந்நிறுவனம் மூடப்பட்ட நிலையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட “யங் இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனம் 2010-ம் ஆண்டில் கையகப்படுத்தியது.

வழக்கு விவகாரம்:

இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் ராகுல் மற்றும் சோனியா காந்தி எவ்வித ஆலோசனை செய்யாமல் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை சோதனை:

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் தலைமை அலுவலகம் உட்பட, 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினத்திலிருந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர்.

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்:

இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு பல குழுக்களாக வந்த அமலாக்கத்துறையினர் காலையிலிருந்து சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும் அமலாக்கத்துறையின் அனுமதியை பெறாமல் அலுவலகத்திற்கு உள்ளே யாரும் வரக்கூடாது எனவும், அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

  • க.சீனிவாசன்

ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *