ராமர் கோயிலுக்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் நேரில் கூட வாங்க மறுத்துவிட்டார் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தூய்மை பணியில் இன்று (ஜனவரி 18) ஈடுபட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த நாட்டில் இருக்கிற ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களிடமும், இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்” என்றார்.
அப்போது அவரிடம், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரியல்ல. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த அவர், “மசூதி கட்டப்பட்டதே கோயிலை இடித்துத்தான் என நாங்கள் சொல்லவில்லை, உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.
அதனால் இடிக்கப்பட்ட இடத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பது தானே நியாயம். அவருடைய கூற்றுப்படியே பார்த்தாலும், கோயிலிருந்த இடத்தை கோயிலுக்கே கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அவருடைய தகப்பனார் ராமர் கோயிலுக்கான அழைப்பிதழை நேரில் கூட வாங்க மறுத்துவிட்டார். ஆனால் அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி மட்டுமல்ல அந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அழைக்கிறோம்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல இந்த கோயிலுக்கும் வந்து ராமர் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உண்மையான GOAT: ரோஹித்தை புகழ்ந்த மும்பை வீரர்… மீண்டும் மீண்டுமா?
உண்மையான GOAT: ரோஹித்தை புகழ்ந்த மும்பை வீரர்… மீண்டும் மீண்டுமா?
எத்தனை புத்த விகாரங்களை இடித்தும், கொள்ளையடித்தும், எத்தனை கோவில்கள் கட்டப்பட்டன என்று கணக்கு தெரியுங்களா, அம்மணி.?