வருமானம் வெறும் ரூ.680 தான்… : கணக்கு காட்டிய மத்திய அமைச்சர்!

அரசியல் இந்தியா

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின்  2021-2022ஆம் நிதியாண்டின் வருமானம் வெறும் 680 ரூபாய் மட்டும்தான் என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி சசி தரூர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜீவ் சந்திரசேகர் இன்று (ஏப்ரல் 4) வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன்மூலம் மத்திய இணை அமைச்சரின் சொத்து விவரம், வருமானம் ஆகிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

இதில் அவர் காட்டியுள்ள வருமான கணக்கு விவரம் திருவனந்தபுரம் மட்டுமல்ல, கேரளா மட்டுமல்ல தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

சந்திரசேகரின் சொத்து மதிப்பு ரூ.23.65 கோடி. வெளிநாடுகளில் உள்ள சொத்துகளையும் சேர்த்தால் அவரது மொத்த சொத்தின் மதிப்பு ரூ.28.09 கோடி ஆகும்.

ரூ.13.69 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.14.4 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

2019 தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சந்திரசேகர் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2024ல் தாக்கல் செய்த வேட்புமனுவில் 2021-22ஆம் ஆண்டில் வருமானத்தின் அளவு வெறும் 680 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

2018-19 நிதியாண்டில் ரூ.10.83 கோடியாக இருந்த ராஜீவ் சந்திரசேகரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2022-23ல் கிட்டத்தட்ட ரூ.5.59 லட்சமாக குறைந்துள்ளது.

2018-19ல் அவரது வருமானம் ரூ.10.83 கோடி. இது 2019-20ல் ரூ.4.48 கோடியாகவும், 2020-21ல் ரூ.17.5 லட்சமாகவும், 2021-22ல் ரூ.680 ஆகவும், 2022-23ல் ₹5.59 லட்சமாகவும் உள்ளது என ஏப்ரல் 4ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்ம் மூலம் தெரியவந்துள்ளது.

சந்திரசேகர் தனது பெயரில் கார் கூட இல்லை என்று பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரின் சொத்து மதிப்பு 56 கோடி ரூபாய் என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்து ரூ.49.3 கோடி, அசையா சொத்து ரூ.6.75 கோடி ஆகும்.

சசிதரூரின் சொத்து மதிப்பு வயநாடு தொகுதி வேட்பாளரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியின் சொத்து மதிப்பை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும்.

ராகுல் காந்தியிடம் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.20.39 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் சொத்தை விட 2 மடங்கு கூடுதலாக சசிதரூர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

25 ஆண்டுகள் முதலமைச்சர்…அஸ்திவாரத்தை அசைக்கும் பாஜக…ஒரிசாவைக் கைப்பற்றப்போவது யார்?

கோவை : ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரச்சாரம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *