ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகையைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார். அதன்பின் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார்.
ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் தர்பார் ஹால்.
இந்த ஹாலுக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் பலகையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இன்று (ஆகஸ்ட் 6)திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதுபோன்று துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன். பாரதியார் பேரன் அர்ஜுன் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவருக்கு அம்மன் சிலையை ஆளுநர் பரிசாக வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலினும் நினைவு பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி தேநீர் விருந்தளித்தார்.
இந்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரியா
ராகுல் காந்திக்கு ஏன் இன்னும் பதவி கொடுக்கவில்லை? : மு.க.ஸ்டாலின்