தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று(ஜூன் 13) சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் மற்றும் மது விலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 8 நாட்கள் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் , உறவினர்கள் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற சீனா உத்தரவு!
மாமன்னனுடன் போட்டியிடும் ‘உயிர் தமிழுக்கு’!