The Election Commission threatens! - Comment by Kharge

தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது – கார்கே

அரசியல்

தேர்தல் ஆணையம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம்  வெளியிட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டதற்கும், திடீரென வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுத்தொடர்பாக இந்தியா கூட்டணியினருக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில், “பொதுவாக தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் மிக தாமதமாக வெளியிடப்படுவதற்கு காரணம் என்ன?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளீர்கள். தேர்தல் சுமூகமாகவும், நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும், தவறான கருத்தை பரப்பி இடையூறுகளையும் உருவாக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கடிதம் உள்ளது.

மல்லிகார்ஜுன கார்கேவின் கடிதம் நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் மீதான அத்துமீறல். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தேர்தல் ஆணையம் கடிதம் வெளியிட்டு இருந்தது.

இதற்கு, தேர்தல் ஆணையம் அறிவுரை கூறுவது போல மிரட்டுகிறது என மல்லிகார்ஜுன கார்கே இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “

தன்னுடைய கடிதம் கூட்டணிக் கட்சிகளுக்காக எழுதப்பட்டதே தவிர, தேர்தல் ஆணையத்திற்காக எழுதப்படவில்லை. நேரடியாக கொடுக்கும் புகார்களையே நிராகரிக்கும் தேர்தல் ஆணையம் கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணிபுரியும் அழுத்தமான சூழ்நிலைகளை நான் அறிவேன்.

ஒருபக்கம் இந்திய குடிமக்கள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்லாம் என்கிறது. மறுபுறம் அறிவுரை கூறும் தொனியில் அச்சுறுத்துகிறது.

அரசியல் சாசனத்தின்படி நேர்மையான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி

இருப்பினும் ஆளும் கட்சி தலைவர்களின் அப்பட்டமான வகுப்புவாத மற்றும் சாதிவெறி பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவது புதிராக உள்ளது.

வாக்குப்பதிவு எண்ணிக்கையின் முழுமையான விவரங்களை பொது தளத்தில் வெளியிட வேண்டும் என்பதையே அனைத்து வாக்காளர்களும் விரும்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

CSK-வுக்கு எதிரான ஆட்டம்… கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம்… காரணம் என்ன?

ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *