அமெரிக்காவில் பத்திரிகை, நாளேடுகள் மூடப்பட்டு வருவதை PR Daily புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டி இன்று (நவம்பர் 25) விசிக எம்.பி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “
அமெரிக்காவில் செய்தி ஏடுகளின் நிலவரம் குறித்த 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 33% அமெரிக்க நாளேடுகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 127 நாளேடுகள் மூடப்பட்டன.
மீதமுள்ள 5,600 செய்தித்தாள்களில், 80% இப்போது வார இதழ்களாக மாறி உள்ளன, 335 மில்லியன் மக்கள் வசிக்கும் தேசத்தில் வெறும் 1,120 நாளேடுகள் மட்டுமே உள்ளன.
வாஷிங்டன் போஸ்ட் மட்டும் 250,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், நாட்டின் முதல் 500 பத்திரிகைகளுக்கான சந்தா எண்ணிக்கை கடந்த ஆண்டு 20 லட்சம் குறைந்துள்ளது.
நியூஸ்ரூம் ஊழியர்கள் கடந்த ஆண்டில் 2,000 வேலைகளை இழந்துள்ளனர், ஒட்டுமொத்த பத்திரிகை துறையில் 100,000க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர்.
பத்திரிகைகளின் 30% உள்ளடக்கம் இப்போது மறுசுழற்சி செய்யப்படுகிறது அல்லது சிண்டிகேட் செய்யப்பட்டுள்ளது, உண்மையான உள்ளூர் செய்திக் கட்டுரைகள் மிகவும் குறைவாக உள்ளன. (ஆதாரம்: PR Daily )
அமெரிக்க நிலவரத்தைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது.
‘கற்றலில் கேட்டல் நன்று’ என வெகுகாலத்துக்கு முன்பே அறிவித்துவிட்டத் தமிழ்ச் சமூகம் அச்சுத் தொழில்நுட்பம் அழிவதைப்பற்றி கவலைப்படுமா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இரட்டை இலை – ஒரு வாரத்தில் உத்தரவு : தேர்தல் ஆணையம்!
உதயநிதி துணை முதல்வரான பிறகு கூடும் சட்டமன்றம்: அப்பாவு அறிவிப்பு!