மோடியை ‘ஹீரோ’ என்று புகழ்ந்த கிரிக்கெட் வீரர்!

அரசியல்

காட்டு விலங்குகளை வணங்கும் ஒரு உலகத் தலைவர், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் அவற்றுடன் நேரத்தை செலவிடும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என்று பிரதமர் மோடியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் புகழ்ந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன புதிய முனையம், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவற்றை நேற்று (ஏப்ரல் 8) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று இரவு மைசூருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் , இன்று (ஏப்ரல் 9) காலையில் மைசூரு அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து 20 கி.மீ தூரம் சவாரியும் மேற்கொண்டார்.

மேலும் , 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், மூன்று நாள் மெகா நிகழ்வை தொடங்கி வைத்து, சமீபத்திய புலிகள் கணக்கெடுப்புத் தரவுகளையும் வெளியிட்டார்.

இந்நிலையில், காட்டு விலங்குகளை வணங்கும் ஒரு உலகத் தலைவர் பிரதமர் மோடி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 9) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காட்டு விலங்குகளை வணங்கும் ஒரு உலகத் தலைவர், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் அவற்றுடன் நேரத்தை செலவிடும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

அவருடைய கடந்த பிறந்த நாளின் போது இந்தியாவின் காடுகளில் சிறுத்தைகளை விடுவித்தார் என்பதை நினைவில் கொள்க. ஹீரோ மோடி” என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை கடந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளின் போது மத்திய பிரதேச காட்டுக்குள் பிரதமர் மோடி திறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னை – கோவை வந்தே பாரத்: ஜாலி ட்ரிப் போலாமா?

உறுப்பினர் சேர்க்கை: பரிசுக்கு நான் கேரண்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0