அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக சென்னை ஓமந்தூரார் மருத்துமனைக்கு புறப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தமிழக அமைச்சர்கள் 16 பேர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்த்து வருகின்றனர்.

இதனிடையே, திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தற்போது மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக தனது ஆழ்வார்போட்டை இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”இது கொடுங்கோல் ஆட்சி முறை”-சீமான் கண்டனம்!